logo
தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசளிப்பு

தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசளிப்பு

01/Aug/2021 02:41:15

புதுக்கோட்டை, ஜூலை:      தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியர் கவிதா ராமு  பரிசுகளை வழங்கினார். 

பின்னர், மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தினை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதும் அரசுப் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையால் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019 -ஆம் ஆண்டிற்கு தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பணியாளர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. 

 இதன்படி, தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய மாவட்ட நிலை அலுவலகங்களில், வேளாண் இணை இயக்குநர், உதவி ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் மற்றும் அரிமளம் பேரூராட்சி அலுவலகம் என 3 அலுவலகங்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3,000 பரிசு தொகையும்,  மாவட்ட பதிவாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை நிலநீர் உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களுக்கு இரண்டாம் பரிசாக தலா ரூ.2,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ஆட்சியர் 

இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் கா.பொ. இராசேந்திரன், வேளாண்இணை இயக்குநர் இராம.சிவகுமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 


Top