logo
 தமிழக அரசின் 108 ஊர்தி சேவைக்கு கரூர் வைஸ்யா வங்கி சார்பில் வழங்கப்பட்ட அவசரகால ஊர்தி சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் 108 ஊர்தி சேவைக்கு கரூர் வைஸ்யா வங்கி சார்பில் வழங்கப்பட்ட அவசரகால ஊர்தி சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

19/Jun/2021 06:52:28

சென்னை, ஜூன்:  தமிழக அரசின் 108 ஊர்தி சேவைக்கு கரூர் வைஸ்யா வங்கி சார்பில் வழங்கப்பட்ட அவசரகால ஊர்தி சேவையை முதல்வர் மு..ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

நோயுற்ற பொது மக்கள் மருத்துவமனைகளில் சேர்ந்து உடனடியாக மருத்துவ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டம் மன்றந்த முன்னாள் முதனைமச்சர் முத்தமிழ் அறிஞர்  கலைஞர் அவர்களால் 15.09.2008 அன்று மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டது.

அவசர மருத்துவச் சிகிச்சை, தீ பத்து, சாலை விபத்து போன்ற காலங்களின் பொதுமக்கள் 108 என்ற கட்ட ணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு  இச்சேவையை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் தற்போது 1,303 அவசரகால ஊர்திகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 27,53,799 கர்ப்பிணித் தாய்மார்கள் உள்பட  1,12,64,000-க்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.

சமூகப் பொறுப்புணர்வோடு கரூர் வைஸ்யா வங்கி, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் 108 இலவச அவசரகால ஊர்தி சேவை பயன்பாட்டிற்காக வழங்கிய, 64 இலட்சத்து 46 ஆயிரத்து 541 ரூபாய் மதிப்பிலான 2 மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் அவசரகால ஊர்திகள்.

மற்றும் மலைவாழ் மக்களின் சேவைக்காக, மலைப் பகுதிகளில் செல்லும் வகையிலான ஒரு கோடியே 12 இலட்சத்து 40 ஆயிரத்து 931 ரூபாய் மதிப்பிலான 8 அவசரகால ஊர்திகள், என மொத்தம் ஒரு கோடியே 76 இலட்சத்து 87 ஆயிரத்து 472 ரூபாய் மதிப்பிலான 10 அவசரகால ஊர்திகளின் சேவைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின்  (19.6.2021) தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிகைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன்,

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் டக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் இயக்குநர் டாக்டர்ச. உமா, கரூர் வைஸ்யா வங்கியின் பொது மேலாளர் கே.வி.எஸ்.எம். சுதாகர், மண்டல மேலாளர்கள் வி. கிருஷ்ணன் ஆர். கணேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Top