16/Jul/2021 01:28:00
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியில் பாழடைந்து கிடக்கும் முப்பது அடி ஆழமுள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக மயில் ஒன்று தவறி விழுந்தது. ஆழமான கிணறாக இருந்ததால் அந்த மயிலால் கிணற்றிலிருந்து மேலே பறக்க முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகலின்பேரில் புதுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறக்கி பொதுமக்கள் உதவியுடன் மயிலை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இதையடுத்து, மயங்கிய நிலையில் இருந்த மயிலை தீயணைப்பு துறையினர் வனத்துறை யிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மயிலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர்.