logo
வடக்கோட்டை ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் ஆலயத்தில்  புரட்டாசிமாத சிறப்பு வழிபாடு

வடக்கோட்டை ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் ஆலயத்தில் புரட்டாசிமாத சிறப்பு வழிபாடு

03/Oct/2020 02:17:22

புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூரில் வடக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ  சுந்தரராஜப்பெருமாள் ஆலயத்தில்  புரட்டாசிமாத சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

இதையொட்டி, ஆலயத்தில் உள்ள ஸ்ரீ  சுந்தரராஜப்பெருமாள் தயார் ஸ்ரீதேவி  பூதேவி சுவாமிக்கு  பாலபிஷேகம், பன்னீர் அபிஷேகம்,  இளநீர்,தயிர் சந்தனம்,மஞ்சள் நீர் உள்ளிட்ட பூஜை பொருள்களால்  சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனை நடைபெற்றது.

உற்சவர்  ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்  தயார்  ஸ்ரீதேவி  பூதேவிக்கு  சிறப்புமலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை  சௌந்தராஜன்  பட்டாச்சாரியார் செய்திருந்தார்.   

Top