15/Apr/2021 02:19:57
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு எல்லை தாண்டிச்சென்று விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அரியர் தேர்வு தொடர்பாக வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம் அந்த வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞரிடம் கொரோனா தொற்று குறித்த நிலவரத்தை கேட்டபோது தமிழக்கதில் கொரோனா 2-ஆவது அலை கைமீறிவிட்டதாகவும், பாதிக்கு எல்லை தாண்டிவிட்டதாகவும் தகவல் தெரிவித்தார். மேலும், போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும், விரும்பினால் 40 வயதுக்கு உள்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அரசு தயாராக உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.