logo
சிவகங்கை எம்பி கார்த்தி ப.சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

சிவகங்கை எம்பி கார்த்தி ப.சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

04/Jul/2021 10:53:56

திருமயம், ஜூலை சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர்  கார்த்தி .சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் மாற்றுக்கட்சியினர் 20 பேர் இணைந்தனர்.

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர்  கார்த்தி . சிதம்பரம்  முன்னிலையில் திருமயம் சட்டமன்றத்தொகுதி கீழாநிலைக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் மேல்நிலைப்பட்டி பழனியப்பன்  தலைமையில் 20 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி,புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முன்னாள் எம்எல்ஏ-ராம சுப்புராம், வட்டார காங்கிரஸ்தலைவர்கள் கே. வீரப்பன்,  ஆர். அர்ஜுணன், பொதுக்குழு உறுப்பினர் எம்.கே. முகமது இப்ராகிம், திருமயம் ஒன்றியக்குழு உறுப்பினர் கணேஷ்சுப்புராம் உள்பட காங்கிரஸ் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

 

Top