logo
 நாளை பதவி ஏற்கும் தமிழக அமைச்சரவை.. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள்.. எஸ் ரகுபதி- சட்டத்துறை அமைச்சர். சிவி.வீ. மெய்யநாதன்- இளைஞர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை

நாளை பதவி ஏற்கும் தமிழக அமைச்சரவை.. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள்.. எஸ் ரகுபதி- சட்டத்துறை அமைச்சர். சிவி.வீ. மெய்யநாதன்- இளைஞர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை

06/May/2021 05:36:04

சென்னை: திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில்  நாளை பதவி ஏற்கவுள்ள  தமிழக அமைச்சரைப் பட்டியல் வெளியானது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய ஆட்சிப் பணி, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கம்.

துரைமுருகன்: நீர்ப்பாசனம் துறை. உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி.

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி.வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி. சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்.மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். செய்தி. விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.உணவுத்துறை அமைச்சர் சக்காபாணி.நிதி துறை அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன். இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு.சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன்.  சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்.தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி.வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி. 

 சுற்றுலாத்துறை அமைச்சர் ம. மதிவேந்தன்,  செஞ்சி மஸ்தான் - சிறுபான்மை துறை, வெளிநாட்டு தமிழர் நலன், வக்பு வாரியம். சா. மு. நாசர் - பால்வளத்துறை ஆகிய 34 பேர் பதவி ஏற்கவுள்ளனர். 

Top