logo
9 மாதங்களுக்கு பிறகு பழனியில் ரோப் கார் சேவை தொடக்கம்

9 மாதங்களுக்கு பிறகு பழனியில் ரோப் கார் சேவை தொடக்கம்

29/Dec/2020 11:49:03

பழனி, டிச: திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு வரக்கூடிய பக்தர்கள் மலையடிவாரத்திலிருந்து மலை மீது சென்று சாமி தரிசனம் செய்து வர வசதியாக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வந்ததது.

கொரானா ஊரடங்கு உத்தரவு காரணமாகக் கடந்த 9 மாதங்களாக ரோப்கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின் கொரோனா ஊரடங்கு தளர்வுகளால் கடந்த மாதம் முதல் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் ரோப்கார் சேவை பிரத்தியேகமாக இயக்கப்பட்டு வந்ததது.

இதற்குப் பக்தர்கள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்ததுடன் அனைத்து தரப்பினருக்கும் ரோப் கார் சேவையை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முதல் ரோப் காரில் சேவை முழுமையாகத் தொடங்கும் என கோவில் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இருப்பினும் ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்றும் ஆலய நிர்வாகம் நிபந்தனை விதித்து பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், நாள் ஒன்றுக்கு 1500 பக்தர்கள் வரை ரோப் கார் மூலம் சென்றுவர அனுமதிக்கப் படுவார்கள் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரோப் கார் பயணத்திற்கு ரூ.100 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Top