logo
அமமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி. தினகரன் கந்தர்வகோட்டையில் பிரசாரம்

அமமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி. தினகரன் கந்தர்வகோட்டையில் பிரசாரம்

23/Mar/2021 01:19:27

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் அமமுக மற்றும் கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில்   சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். 


புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சுப்ரமணியன் விராலிமலை சட்டமன்றத் தொகுதிஅமமுக வேட்பாளர் கார்த்திக் பிரபாகரன், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் விடங்கர், திருமயம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர்  முனியராஜ்,  அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர்  சிவசண்முகம், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி அமமுக  வேட்பாளர் ப. லெனின் ஆகிய ஆறு வேட்பாளர்களை கந்தர்வகோட்டை கடை வீதியில் ஒரே இடத்தில் வைத்து வாக்குள் சேகரித்து டிடிவி. தினகரன் பேசியதாவது: 


6 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே நிறைவேற்றிக் கொடுப்போம் தற்போது ஆளுகின்ற கொள்ளை கும்பலை விரட்டிய டிக்க வேண்டும் எனவே   6 சட்டமன்ற தொகுதியிலும் அமமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை நீங்கள்  பேராதரவளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். 

டிடிவி தினகரனுக்கு ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில்  வீரவாள் பரிசு அளித்தனர்.


 

Top