logo
பேருந்து பயணத்தின்போது  கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம்  பின்பற்ற வேண்டும்:ஆட்சியர் கவிதாராமு அறிவுறுத்தல்

பேருந்து பயணத்தின்போது கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்:ஆட்சியர் கவிதாராமு அறிவுறுத்தல்

28/Jun/2021 08:17:36

புதுக்கோட்டை, ஜூன்: பொதுப்போக்குவரத்து அரசின் அனுமதியளித்ததயைடுத்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பொது போக்குவரத்து தொடங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திங்கள்கிழமை  (28.06.2021நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள  கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகளில் 2 -ஆம் வகைகளில் அமைப்பெற்றுள்ள மாவட்டங்களில் பொது போக்குவரத்தை உரிய கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இயக்கிட அனுமதியளித்துள்ளார். அதன்படி  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 564 வழித்தடங்களில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. இதில்  முதற்கட்டமாக  150 புறநகர் பேருந்துகளும், 139  நகர் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. பேருந்து இயக்கத்தின் போது 50 சதவீத பயணிகளை அனுமதித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கோவிட் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை  உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார் ஆட்சியர் கவிதா ராமு .

இந்த ஆய்வில்புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) சுப்பு, வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top