logo
 தலைநகர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழில் சங்கங்கத்தினர் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

தலைநகர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழில் சங்கங்கத்தினர் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

26/Jun/2021 11:35:45

 புதுக்கோட்டை, ஜூன்: தலைநகர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழில் சங்கங்கத்தினர் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை  காலை 11மணிக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மாவட்ட தொமுச தலைவர் அ.ரெத்தினம்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோரிக்கைகள்: நாடுமுழுவதும் பா.. -வின் சர்வாதிகார ஆட்சி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சின்னஞ்சிறு தீவான லட்சத்தீவுகளைக்கூட அது விட்டு வைக்கவில்லை.  கொத்துக் கொத்தாய் கொன்று குவித்து, கொரோனா தாண்டவமாடிய போது, ஏராளமான குளறுபடிகளை செய்து ஒன்றிய அரசு மக்களைக் கைவிட்டுவிட்டது.

 நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள், 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்தச் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டுமென தலைநகர் தில்லியில் கடந்த 6 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அழைத்துப்பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய மோடி அரசு முன் வரவேண்டும் .

விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்.குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தியா முழுமையும் அனைவருக்கும் கட்டணமின்றி இரு முறை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத  அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் நிவாரணத் தொகையும், ஒவ்வொருவருக்கும் 10 கிலோ உணவுப் பொருட்களும் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களையும் அரசுத் துறைகளையும் தனியார் மயப்படுத்தும் கொள்கைகளை கைவிட வேண்டும்.

இந்த கிருமி தொற்று காலத்திலும், இரவு பகலாய் உழைக்கும் உள்ளாட்சி, துப்புரவுப்பணி, ரயில்வே, போக்குவரத்து, நிலக்கரி, பாதுகாப்பு - உருக்கு-பெல் தொழிற்சாலைகள், தொலை தொடர்பு, அஞ்சல், வங்கிகள், காப்பீடு, மின்சாரம், குடிநீர், கல்வி, மருத்துவப் பணிகள், பிராவிடண்ட் பண்ட் துறைமுக ஊழியர்கள் அனைவரையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆஷா அங்கன்வாடி, துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும். கொரோனாவால்  உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்தில், தொமுச மாவட்ட கவுன்சில் செயலர் கி.கணபதி, எம்.வேலுசாமி, ராஜேந்திரன், தட்டாம்பட்டி ஆறுமுகம், செல்வகுமார்,  .கணேசன், சிஐடியு சார்பில்   மாவட்டத்தலைவர் .முகமதலிஜின்னா, மாவட்ட செயலர் .ஸ்ரீதர், அன்பு மணவாளன், ஏஐடியுசி சார்பில் கே.ஆர். தர்மராஜன், எம்.என். ராமச்சந்திரன்,  அனைத்துச் சங்க நிர்வாகிகள்  சண்முகம், எஸ்.பாலசுப்பிரமணியன், அரசப்பன், நாகராஜன், கோபால், ராஜேந்திரன், நாகராஜன், பழனியப்பன், யோகராஜ், அழகேந்திரன், செந்தில்குமார், வைரவன், மனோகர், மாரிக்கண்ணு  

உள்பட  LPF - CITU - AITUC -AICCTU தொழில்சங்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Top