logo
 கரூரில்  மாநிலத்தில் முதலாவதாக காணொலி மூலம் நடத்தப்பட்ட மக்கள் குறை கேட்பு முகாம்: சில கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு  காண உத்தரவிட்ட ஆட்சியர்

கரூரில் மாநிலத்தில் முதலாவதாக காணொலி மூலம் நடத்தப்பட்ட மக்கள் குறை கேட்பு முகாம்: சில கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண உத்தரவிட்ட ஆட்சியர்

23/Jun/2021 12:56:01

கரூர், ஜூன்: தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக காணொளிக்காட்சி வாயிலாக செயல்படுத்தப்பட்ட காணொளிக்காட்சி வாயிலாக செயல்படுத்தப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   வீட்டில் இருந்தே குறைகளைத் தெரிவித்த பொதுமக்கள், இளைஞர்களின்  கோரிக்கைகளுக்கு உடனடி    தீர்வு காண மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.  

 கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதை தவிர;க்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெற்று வந்த மனுநீதிநாள் முகாம்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி காணொளிக்காட்சி வாயிலாக காணொளி  குறைதீர்  கூட்டம்   என்ற பெயரில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவரால்அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில்  (21.6.2021) காலை 11 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காணொளி குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  டாக்டர் பிரபுசங்கர்  தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும், குறிப்பாக இளைஞர்களும் வீட்டில் இருந்தபடியே ஆர்வமுடன் பங்கேற்க தங்கள் பகுதிக்கான கோரிக்கைகளையும், தனிநபர் கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சியரிடம் காணொளி வாயிலாக நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

ஒவ்வொருவரின் கோரிக்கைக்கும் சம்மந்தப்பட்; துறை அலுவலர்களே காணொளியில் வந்து பதிலளித்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.   அனைவரின் கோரிக்கைகளையும்  பரிசீலித்த மாவட்ட ஆட்சியர்  24 மணி நேரத்திற்குள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ள கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நிறைவேற்றிவிட்டு அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்

காலை 11 மணிக்குத் துவங்கிய இந்தக் காணொளிக்குறைதீர; கூட்டம் மதியம் 2 மணிவரை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர; மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 51 நபர்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டம்தான் மக்கள் குறைதீர்க்கும் நாள் திட்டம்கொரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்காலிகமாக இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை.

மக்களின் நலன் ஒன்றையே முதன்மையாக கொண்டு, பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்று   தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். தலைமைச் செயலாளரும்  இந்தக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்

எனவே, மக்களின் நலன் கருதி வீட்டில் இருந்தே ஆட்சித்தலைவருடன் காணொளி வாயிலாக நேரில் பொதுமக்கள் கலந்துரையாடி குறைதீர் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கும் விதமாக  செயல்படுத்தப்பட்ட காணொளி  . இத்திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளளது

தகவல் மையத்தின் சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் Bharat VC லியின் மூலம் இக்கூட்டம் நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனா தொற்று முழுவதும் குறைந்தும் குறைதீர்க்கும் கூட்டத்திற மக்கள் நேரில் வந்து மனு அளிக்கலாம் என்ற உத்தரவு வரும் வரை இனிவரும் நாள்களில் திங்கள்கிழமைதோறும் காணொளி குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .எம்.லியாகத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொதுஷாஜகான், தேசிய தகவலியல் அலுவலர் கண்ணன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன்  ஆதிதிராவிடர் நல அலுவலர் சந்தியா   உள்ளிட்டோர் காணொளி வாயிலாக கலந்துகொண்டனர்.

 

Top