06/Dec/2020 09:59:39
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினர் 92 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதராக முழக்கங்கள் எழுப்பியவாறு கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இடது சாரிகட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 92 பேரை கறம்பக்குடி போலீஸார் கைது செய்தனர்.