29/Nov/2020 07:51:54
ஈரோடு: கால்பந்தாட்ட வீரரான டியேகோ மாரடோனா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு, உலகம் முழுதும் உள்ள அவரது ரசிகர்கள் அவரது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், புரட்சியாளர்களான சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் கருத்துகளை பின்தொடர்ந்தும், உலக சமதான விரும்பியுமாக இருந்தவர் மாரடோனா.
இந்நிலையில், மாரடோனா மறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(ஏ.ஐ.வொய்.எப்) சார்பில், மாரடோனா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, பெருமன்றத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் த. ஸ்டாலின் குணசேகரன், ஈரோடு வட்டார தலைவர் சோமசுந்தரம், இளைஞர் பெருமன்றத்தின் வட்டார அமைப்பாளர் மணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.