22/Jun/2021 02:12:30
ஈரோடு, ஜூன்: ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோடு கால்நடை மருத்துவமனை அருகே செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் சிந்தனை செல்வன் தலைமை வகித்தார். கொள்கை பரப்புச் செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைச்செயலாளர் தேசிங்கு, மாநகர துணை செயலாளர் கவுதம், மாநகரச் செயலாளர் ருத்ரன், பகுதி செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வலியுறுத்தியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும், தமிழகத்தில் ஜாதிய கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சமூக விதிகளை கடைபிடித்து, முக கவசம் அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்