logo
புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியருக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தினர்  வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியருக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தினர் வாழ்த்து

19/Jun/2021 04:53:57

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியருக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்ற கவிதா ராமு அவர்களை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து  பணி சிறக்க வாழ்த்துத்தெரிவித்தனர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில்  சங்க துணைத் தலைவர் .எம்.எஸ்.இப்ராஹிம்பாபு, துணைச்செயலாளர் கே.எல்.கே.ராஜாமுகமது, நிர்வாகக்குழு உறுப்பினர்  ஜெ.ராஜா முகம்மது  ஆகியோர் கலந்து கொண்டனர் .


இதையடுத்து, புதுக்கோட்டை டவுன்  காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள லில்லி கிரேஸ் அவர்களை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 


 

Top