logo
ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த  67 மையங்களில் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்

ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 67 மையங்களில் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்

19/Jun/2021 03:34:17

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த  67 மையங்களில் பொதுமக்கள்  ஆர்வத்துடன் திரண்டு சென்று  தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 7 நாட்களுக்கு மாவட்டத்தில் தடுப்பூசி போடவில்லை. இதையடுத்து கடந்த 13, 14-ஆம்  தேதி மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் கடந்த 15-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 16 -ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு அதிகாலை 4 மணி அளவில் 15 ஆயிரத்து 600 கோவிஷில்டு, 4 ஆயிரம் கோவேக்சின் என மொத்தம் 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்தன.

இதையடுத்து புறநகர் மாவட்டங்களில் உள்ள 50க்கு மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்மாநகர் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் இரண்டாம் டோஸ் போடப்பட்டது.

 இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதும் 67 மையங்களில் சனிக்கிழமை தடுப்பூசி போடும் பணி காலை 6 மணிக்கு  தொடங்கியது. மக்கள் அதிகாலைமணி முதலே ஆர்வத்துடன் தடுப்பூசி போடும் மையத்திற்கு முன் குவிய தொடங்கினர்.

ஈரோடு மாநகர் பகுதியில் 10 மையங்களில் வழக்கமாக 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் 200 பேருக்கு போடப்பட்டு வந்தது. ஆனால் இன்று 100 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு அவர்களுக்கு போடப்பட்டது. ஒரு சில மையங்களில் இரண்டாம் டோஸ் போடப்பட்டதுபெரும்பாலானோருக்கு  கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டது.

Top