logo
தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம் மூலம்  கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல்

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம் மூலம் கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல்

18/Jun/2021 07:00:21

புதுக்கோட்டை, ஜூன்: தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றத்தின் சார்பில்கொரோனா தடுப்பு உபகரணங்களாகிய முகக்கவசம், கைகழுவும் சோப்பு மற்றும்  கபசுரக் குடிநீர் தூள் ஆகியவை அடங்கிய பைகள் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை  மாவட்ட நேரு யுவ கேந்திரா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ஆகிய அமைப்புகளின் மூலமாக இந்த பொருட்கள்  அடங்கிய பைகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மக்களுக்கும் வழங்கப்பட்டது.

நேரு யுவ கேந்திரா சார்பில் வழங்கப்பட்ட பொருட்களை  17.6.2021 அன்று மாவட்ட இளையோர் அலுவலர்  கே. ஜோயல் பிரபாகர் வழங்கினார். இதில் புதுக்கோட்டை, திருவரங்குளம் மற்றும் அன்னவாசல் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் நேரு யுவ கேந்திரா சார்பில் சேவையாற்றி வரும் இளையோர் மற்றும் மகளிர் மன்ற பொறுப்பாளர்களும், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியான இப்பணிகளை தமிழ்நாடு அன்புவழி அறப்பணி  மன்றத்தின் சார்பில், நேரு யுவ கேந்திரா கணக்காளர் ஆர். நமச்சிவாயம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற மாநில பொறுப்பாளர் கே. சதாசிவம், மாவட்ட தலைவர் வி.எம்.கண்ணன், மாவட்ட செயலாளர் செல்வா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொறுப்பாளர் எம்.வீரமுத்து ஆகியோர் ஒருங்கிணைத்து செயல்படுத்துகின்றனர்.

இதைப் போலஏற்கெனவே, தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றத்தின் சார்பில், சேவை கோவிந்தராஜனால்  வழங்கப் பட்ட, அரிசி பருப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிய பைகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் ஏழை எளிய கிராமப்புற மக்களுக்குவழங்கப்பட்டது.

 

Top