logo
பொன்னமராவதி பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை : சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி பேச்சு

பொன்னமராவதி பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை : சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி பேச்சு

06/Jun/2021 08:55:56

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், வலையப்பட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு தனியார் அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை வலையப்பட்டி தனியார் மண்டபத்தில்   சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினா; கார்த்திக் .சிதம்பரம் முன்னிலையில்  ஞாயிற்றுக்கிழமை (6.6.2021) நடைபெற்ற நிகழ்வில்  மருத்துவர்களிடம் ஒப்படைத்தார்.

 பின்னர், சட்ட அமைச்சர் ரகுபதி பேசியதாவது: கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்  போர்க்கால அடிப்படையில்  பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்தவகையில் கோவிட் நோய் தொற்றை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளற்ற முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தமிழக அரசு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இதே போன்று தனியார் அமைப்புகளின் சார்பிலும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில்  பொன்னமராவதி  அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு வலையப்பட்டி நகரத்தார் சங்கம் (கோயம்புத்தூர்) மற்றும் சோனா கல்வி குழுமம் (சேலம்) ஆகியோர் இணைந்து இசிஜி கருவி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

திருமயம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான உதவிகள் வழங்க விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று இந்த உதவிகளை வழங்கியமைக்கு நன்றி. மேலும் எனது வேண்டுகோளை ஏற்று திருமயம் அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளும், மேலைசிவபுரி, காரையூர் மற்றும் நற்சாந்துப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 1 ஆக்ஸிஜன் செறிவூட்டும்  கருவிகள் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதற்கும் எனது நன்றிகள்.

கோவிட் கட்டுப்படுத்தப்பட்ட பின் எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் பொன்னமராவதி பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதனால் இப்பகுதியில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா;கள் இங்கு வேலைவாய்ப்பை பெற முடியும். சிப்காட் உருவாக்கத்தின் போது மேற்கண்ட தனியார் குழுமங்களின் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளை உருவாக்க முன்வர வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் இப்பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள்.

ஏற்கெனவே பொது மக்களுக்கு முதற்கட்டமாக ரூ.2,000 கோவிட் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது 2-ஆம் கட்டமாக ரூ.2,000 நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளதுடன், 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்பட உள்ளது.

அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இரவு, பகல் பாராது தொடர்ந்து கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் தமிழக அரசின் கோவிட் தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்றி முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல் போன்றவற்றை கடைபிடித்து கோவிட் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், முன்னாள் எம்எல்ஏ- ராமசுப்புராம்ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ராமு, சோனா கல்வி குழும நிர்வாகி  சி.வள்ளியப்பா, பிஎல்.கே.ரத்னா பழனியப்பன், வைரவன்,   லேணா நாராயணன், நகரத்தார் சங்க உறுப்பினர், சோனா கல்வி குழும நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top