logo
ஈரோடு அருகே பவானியில் நகராட்சியில் கொரோனா பரிசோதனைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பார்களா?.

ஈரோடு அருகே பவானியில் நகராட்சியில் கொரோனா பரிசோதனைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பார்களா?.

17/Jun/2021 07:12:27

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சியில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைக்க  அப்பகுதி பொதுமக்கள் அலட்சியப்படுத்தாமல் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென  நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது.தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம்சுகாதாரத் துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாகச்சென்று சளி,காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கணகெடுப்பின் போது சளி, காய்ச்சல் இருப்பது கண்டறியப்படும் நபர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செயயப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் புறநகர் பகுதிகளில் பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் பவானி நகராட்சி சார்பில் 10 நபர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சாலைகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு சாலைகளில் செல்வோருக்கு பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கென தனியாக 10 நபர்களை பவானி நகராட்சி நிர்வாகம் நியமனம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் ஊழியர்கள் சாலைகளில் செல்வோரை பரிசோதனைக்கு அழைத்தால்அவர்கள் அலட்சியப்படுத்துவதாகவும் தரக்குறைவாக பேசுவதாகவும் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், கொரோனா தடுப்புப்பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Top