logo
பெண்களுக்கெதிரான வன்முறையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி-நிஷாபார்த்திபன் பேட்டி

பெண்களுக்கெதிரான வன்முறையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி-நிஷாபார்த்திபன் பேட்டி

17/Jun/2021 03:52:08

புதுக்கோட்டை, ஜூன்: பெண்களுக்கெதிரான வன்முறையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன்.

புதுக்கோட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளராக புதன்கிழமை  பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர்  வியாழக்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் மேலும் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் முழுமையாக கண்காணிக்கப்படும்குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளைப் பிடிக்கவும்  தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா, மணல் கடத்தல் போன்றவற்றை தடுக்க தனி கவனம் செலுத்தப்படும்.

 சமூக விரோதிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முன்னுரிமை அளித்து   பொதுமக்களிடம் காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் அமையும். மேலும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளில் தனி கவம் செலுத்தப்படும். குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து புகார்களை அளிக்க 24 மணி நேரமும் செயல்படும் 100 மற்றும் 1098 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்

போக்ஸோ வழக்குகள் அதிகரித்துள்ளதற்கு கொரோனா முடக்கத்தால் வீட்டில் இருப்பதும் முக்கிய காரணமாகிறது. இது தொடர்பான குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா முடக்க காலத்தில் குழந்தைத்திருமணங்கள் அதிகரித்துள்ளது. இதைத்தடுக்க  குழந்தைகளால் முடியாது. பெற்றோர்களிடம்தான் விழிப்புணர்வு தேவைபெண்களின் கல்வி எதிர்காலம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் இது குறையும்.

ஆன்லைன் வகுப்புகளைக் கண்காணிக்க திருச்சி மண்டல காவல்துறைத்தலைவர் அறிவித்துள்ள வழிகாட்டி நெறிகளை  மண்டலத்தைச்சார்ந்த அனைத்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர்களும் பின்பற்றுவர். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை  பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி தைரியமாக புகார் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..

கொரோனா சூழலில் பணியாற்றும்  போலீசார் 5 -இல் 1 நபர்  வார விடுமுறை எடுக்க வேண்டும். காவல்துறையினருக்கு  போதுமான ஓய்வு கிடைக்கும். வலுக்கட்டாயமாக வாரம் ஒரு நாள் விடுமுறை என்றில்லாமல் அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களிலும் விடுமுறை அளிக்கப்படும். மேலும் பணிக்கு வரும்  காவலர்களுக்கு  மனஅழுத்தத்தைப் போக்கும் வகையில் யோகா, தியானம், மனநலம்  போன்ற பயிற்சிகள் அளிக்கத் தேவையான அலுவலர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டதால்  கள்ளச்சாராயம்  தற்போது இல்லை. எனினும், புதுக்கோட்டை, ஆலங்குடி மதுவிலக்கு  பிரிவு போலீஸார் மாவட்டம் முழுதும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஆங்காங்கே வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன.

புதுக்கோட்டை நகரில் போக்குவரத்து போலீஸாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது குறித்து ஆய்வு செய்து  நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக தீவிரமாக கண்காணித்து  நடவடிக்கை எடுக்கப்படும்மேலும் பொதுமக்கள் தங்களின் குறைகளை    7293911100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.

2014-15 ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் , அதன்பின் கோவையில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், பின்னர்  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  3 மாதங்களும், சென்னையில் மதுவிலக்கு தடுப்பு பிரிவில்  ஓர் ஆண்டும்,

பின்னர் சென்னையில் சி.பி.சி..டி பிரிவில் காவல் கண்காணிப்பாளராக ர் ஆண்டும், அதையடுத்து  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  2  ஆண்டுகளும்  பணியாற்றிவிட்டு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளதாகவும் நிஷாபார்த்திபன் தெரிவித்தார்.

Top