logo
அந்தியூரில் மாவள்ளி கிழங்கை  கடத்தியதாக கைது செய்யப்பட்ட நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு

அந்தியூரில் மாவள்ளி கிழங்கை கடத்தியதாக கைது செய்யப்பட்ட நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு

02/Mar/2021 06:57:44

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த தாமரைக்கரை அருகேயுள்ள தம்புரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஓட்டுனர் முருகேசன்.

இவர் பர்கூர் வனப்பகுதியில் இருந்து மாவள்ளி கிழங்கை சட்ட விரோதமாக தனது வேனில் விற்பனைக்காக கடத்திச் வந்தாராம்.

அந்தியூர் வரட்டுப்பள்ளம் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த வனக்காப்பாளர் துரைசாமி முருகேசனை நிறுத்தி சோதனையில் செய்தபோது சுமார் 50 கிலோ எடை கொண்ட 4 மூட்டைகளில் காய்ந்த மாவள்ளிக்கிழங்கை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, சட்ட விரோதமாக மாவள்ளிக் கிழங்கை கடத்தி வந்த முருகேசன் கைது செய்யப்பட்டார்.  மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விசுவநாதன் உத்தரவுப்படி ரூ.50-ஆயிரம்  அபராதம் விதிக்கப்பட்டது. இந்த கிழங்கானது உணவு மற்றும் மருத்துவ குணத்திற்காக பர்கூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு அதிக தொகைக்கு வியாபாரிகள் வாங்கி செல்வதாகக் கூறப்படுகிறது.

Top