07/Dec/2020 06:42:44
ஈரோடு, டிச: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில்திருநங்கை சிம்ரன் தலைமையில் 5 -க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வந்து அங்குள்ள புகார் பெட்டியில் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை போட்டனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: எங்கள் 5 பேரிடமும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருநங்கைக்கான அடையாள அட்டை உள்ளது. எங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், தகுதி இல்லாதவர்களுக்கு வீடு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். சிலர் போலியான அடையாள அட்டை வைத்து சுற்றி வருகின்றனர்.அவர்களை அதிகாரிகள் கண்டறிந்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.