logo
இந்திய மருத்துவர்கள் சங்கம் ( தமிழ்நாடு கிளை) முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்  வழங்கியது

இந்திய மருத்துவர்கள் சங்கம் ( தமிழ்நாடு கிளை) முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியது

15/Jun/2021 12:30:18

சென்னை, ஜூன்: இந்திய மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு கிளை சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை சங்க நிர்வாகிகள்  முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில், சுகாதார செலவினங்களுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கி உதவ முன் வருமாறு, கடந்தமாதம்  11-ஆம் தேதி பொதுமக்களை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரையில் 181 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், பொது நிவாரண நிதிக்கு உதவி வழங்க யாரும் தன்னை நேரில் வந்து பார்க்காமல், ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் உதவிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு கிளை சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் (14.6.2029) நடைபெற்ற  நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்களை இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின்  தலைவர் டாக்டர் பி. ராமகிருஷ்ணன் நேரில்  சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்துக்கான  காசோலையை வழங்கினார்.

இதில்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை செயலாளர் டாக்டர் .கே. ரவிகுமார், முன்னாள் தலைவர் டாக்டர் சி.என். ராஜா, தலைவர்(தேர்வு) டாக்டர் ஆர். பழனிசாமி, பொருளாளர் டாக்டர் என்.ஆர். தியாகராஜன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

 

 

Top