logo
புதுக்கோட்டையில் அரசு அலுவலர்கள் சார்பில் தீண்டாமை ஒழிப்பு  உறுதி ஏற்பு

புதுக்கோட்டையில் அரசு அலுவலர்கள் சார்பில் தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்பு

31/Jan/2021 12:42:18

புதுக்கோட்டை, ஜன: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் தலைமையில் நடந்த  தீண்டாமை ஒழிப்பு  உறுதி ஏற்கும் நிகழ்ச்சியில்  அனைத்து அரசு அலுவலர்களும்  பங்கேற்ரு உறுதி ஏற்றுக் கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  தீண்டாமையை  ஒழிப்பு உறுதி மொழியை வாசித்தார். இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்- குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக்  கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை  மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். 

அரசியலமைப்பின் அடிப்படைக்  கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என வாசகங்களை  அனைத்து அலுவலர்களும் கூறி  தீண்டாமை ஒழிப்பு  உறுதி ஏற்றுக்கொண்டனர்.

Top