logo
கடைக்காரர்கள் வீட்டிற்கே  மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் வசதி அறிமுகம்: மாநகராட்சி சார்பில் இணையதளம் தொடக்கம்

கடைக்காரர்கள் வீட்டிற்கே மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் வசதி அறிமுகம்: மாநகராட்சி சார்பில் இணையதளம் தொடக்கம்

31/May/2021 08:28:25

ஈரோடு, மே: ஈரோடு மாவட்டத்தில் கடைக்காரர்கள் வீட்டிற்கே  மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் வசதியை  மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கென மாநகராட்சி சார்பில்  தனி இணையதள முகவரி தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநகர் பகுதியில் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி  நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாக வந்து மளிகை, காய்கறி, பழங்களை வாகனங்களில் வந்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.இதற்கு மாநகராட்சியும் அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 22-ஆம் தேதி நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மே24-ஆம்  தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காய்கறி, மளிகை கடைகளுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து மாநகர் பகுதியில் கூடுதலாக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதலில் 132 வண்டிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு 250 வாகனங்களில் காய்கறி மளிகை பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

பல்வேறு பகுதிகளில் நடமாடும் வண்டிகள் செல்லவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரி வித்ததால் மேலும் கூடுதலாக 500 - க்கும் மேற்பட்ட நடமாடும் வண்டிகள் மூலம் விற்ப னை செய்யப்பட்டது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள்  மூலமும் விற்ப னை செய் யப்பட்டு வருகிறது . ஆனால் மளிகை பொருள்கள் மட்டும் 20 வாகனங்களில் மட்டுமே விற்ப னை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளுக்கும் மளிகை பொருள் வாகனங் கள்  வருவதில்லை  என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 

இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கை வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை நீடித்துள்ளது. தற்போது கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகள்  தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கம்போல் காய்கறிகள் பழங்கள் மளிகை பொருட்கள் நடமாடும் வண்டிகள் மூலம் பொது மக்கள் குடியிருப்புக்கு சென்று வினியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

மாநகர் பகுதியில் காய்கறியை பொருத்தவரை எந்த ஒரு பிரச்னையும் இல்லை ஆங்காங்கே காய்கறி வண்டி நடமாடும் தள்ளுவண்டி மூலம் காய்கறிகளை மக்கள் வாங்கி விடுகின்றனர். ஆனால் மளிகை பொருட்கள் வாங்காமல் தான் மக்கள் திண்டாடி வருகின்றனர். தற்போது வெறும் 20 நடமாடும் வண்டிகள் மூலம் மட்டுமே மளிகை பொருட்கள் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. 

இதனால் பல்வேறு பகுதியில் வசிக்கும் மக்களுகள் மளிகை பொருட்கள் வாங்கமுடியாமல் திண்டாடி வருகின்றனர். எனவே மாநகர் பகுதியில் கூடுதல் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் மளிகை பொருட்கள் தங்கு தடையின்றி வினியோகம் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மாநகராட்சி சார்பில்  tnurbantree.tn.gov.in/erode/  என்ற இணையதளம் முகவரி  உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தக் இணையதள முகவரிக்கு சென்று லிங்கை  கிளிக் செய்தால் அதில் மளிகை கடைகளில் பெயர்கள், மளிகை கடைக்காரர் களின் பெயர்கள், அவர்களது செல் போன் எண்கள், மளிகை கடை முகவரிகள், அவர்களின் இ.மெயில் ஐ.டி.கள் அதில் தெளிவாக கொடுக்க பட்டிருக்கும். 

அதைப் பயன்படுத்தி தங்கள் பகுதிக்கு அருகே உள்ள மளிகை கடை எண்களை பெற்று தொடர்பு கொண்டு தேவையான மளிகை பொருள்களை போனில் ஆர்டர்  கொடுக்கலாம்.  ஆர்டரை  பெற்றுக் கொண்டவர்கள் வீடுகளுக்கே நேரில் வந்து  மளிகை பொருட்களை விநியோகம் செய்வார்கள். 

இந்த இணையதள வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி பொருள்கள் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வருவதைத்தவிர்த்து கொரோனா பரவலுக்காக விதிக்கப்பட்டுள்ள முழு முடக்கத்துக்கு  ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் மா. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Top