logo
தமிழகத்தில் செவிலியர் மருத்துவர்களுக்கு தினசரி உணவு செலவு குறைப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் செவிலியர் மருத்துவர்களுக்கு தினசரி உணவு செலவு குறைப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

10/Jun/2021 10:28:47

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்  சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவதுதமிழகத்தில் மருத்துவ மனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் வழங்கப்படும்  உணவுக்கான தினசரி செலவு ஏற்கெனவே இருந்த ரூபாய் 1000 மற்றும் 900- லிருந்து ரூ.450 ஆக குறைக்கப்பட்டுள்ளதுஇதன் மூலம் அரசுக்கு தினமும்  30 லட்சம் ரூபாய்  செலவு மீதம் ஆகிறது. இந்தத் தொகை யாரோ இடைத்தரகர்களுக்கு போய்க்கொண்டு இருந்ததை தற்போது இந்த அரசு தடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு சிகிச்சை அளிக்கும் பணியில்24 மணிநேரமும் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்திலுள்ள உயர்தர உணவகங்களில் இருந்து தரமான  உணவு கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 9 முதல் 10 கோடி ரூபாய் அரசின் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளனதமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 97 லட்சத்து 61 ஆயிரத்து 957 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த மாதத்திற்குள் 37 லட்சம் தடுப்பூசிகள் பெறப்படவேண்டும். அதில் வரும் 13-ஆம் தேதிக்குள் 6.5 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.

Top