logo
புதுக்கோட்டை சந்தைப் பேட்டை பகுதியில்  மாற்றுத்திறனாளிகள், துப்புரவு பணியாளர்களுக்கு எம்எல்ஏ உணவு பொருள்கள் வழங்கல்

புதுக்கோட்டை சந்தைப் பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளிகள், துப்புரவு பணியாளர்களுக்கு எம்எல்ஏ உணவு பொருள்கள் வழங்கல்

09/Jun/2021 05:19:39

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை சந்தைப் பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளிக ளுக்கும்   நகராட்சி துப்புரவுப்பணியாளர்களுக்கும் ஆதரவுற்றோர்க்கும் எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா உணவுப் பொருள்கள்  வழங்கினார்.

புதுக்கோட்டை மேல 5-ஆம் வீதி சந்தைப் பேட்டை பகுதியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா  பங்கேற்று  கொரோனை பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள், நகராட்சி துப்புரவுப்பணியாளர்கள் மற்றும் ஆதரவுற்ற ஏழை எளியவர்கள் 120 பேருக்கு  அரிசி  காய்கறிகள்   உள்ளிட்ட உணவுப் பொருளை  வழங்கினார்.

நிகழ்வில்  நகரச் செயலர் க. நைனாமுகமது,  வட்ட செயலாளர் செல்லையா, முன்னாள் கவுன்சிலர் அறிவுடையநம்பி மற்றும் சரவணன்  கே கிரண்,கே சதீஸ் எம் கரண் ,பி.விஜய கணேஷ், ஆர்.பாண்டி, கே கார்த்திக் மற்றும் மேல 5-ஆம் வீதி இளைஞர்கள்   கலந்து கொண்டனர்.


Top