06/Jun/2021 02:11:08
புதுக்கோட்டை, ஜூன்: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ( 5. 6. 2021) மரம் நண்பர்கள் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் கோயில் வளாத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்வில், மரம் நண்பர்கள் இயக்க நிர்வாகிகள் பேராசிரியர் சா.விஸ்வநாதன், பாரத விலாஸ் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் மெஸ் மூர்த்தி, பழனியப்பா கண்ணன், பிரகாஷ், பொறியாளர் வி. இறையன்பு ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். ஏற்பாடுகளை மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி.எட்வின் செய்திருந்தார்