logo
மருந்தாளுநர் சங்கம்-ஜனநாயக மாதர் சங்கம்-  சார்பில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் முக கவசம் வழங்கல்

மருந்தாளுநர் சங்கம்-ஜனநாயக மாதர் சங்கம்- சார்பில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் முக கவசம் வழங்கல்

06/Jun/2021 01:54:12

புதுக்கோட்டை, ஜூன்:  மருந்தாளுநர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் முக கவசம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை அருகே கேப்பரை, இந்திரா நகர் பகுதிகளில் கணேஷ்நகர் காவல் ஆய்வாளர் முகமது ஜாபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  கொரோனா இரண்டாம் அலைத்தொற்றிலிருந்து   பாதுகாத்துக் கொள்ள உதவும் கிருமிநாசினி, கப சூர கசாயம், முகக்கவசம் மற்றும், நீராவி பிடிக்க பயன்படும் கேப்சூல்கள் ஆகிய பொருள்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி,பொருளாளர் பாண்டிசெல்வி, தமிழ்நாடு பதிவுபெற்ற மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் கார்த்திக், சமுகஆர்வலர்கள் தனபால், ஜெகன், தினேஷ், மேட்டுப்பட்டி திருமேனி,பாண்டியன், செல்வராஜ் மற்றும் சமுக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

 

Top