logo
5% இடஒதுக்கீடு கோரி முடி திருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

5% இடஒதுக்கீடு கோரி முடி திருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

26/Feb/2021 08:51:59

புதுக்கோட்டை, பிப்: முடிதிருத்தும் மருத்துவர் சமூகத்தினருக்கு கல்வி வேலை வாய்ப்பில் 5 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்கவேண்டும். தனி சட்டப்பாதுகாப்பு வேண்டியும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் மாநிலம் தழுவிய கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்புச்செயலர் கண்ணாஸ் ஆர். கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜாலி கணபதி தொடக்கி வைத்தார். இதில் மாவட்ட அமைப்புச் செயலர் எம்.பி.முத்து, நகரத்தலைவர் லோகநாதன் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் முடிதிருத்தும் நிலையங்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் கடைகளும் மூடப்பட்டிருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Top