logo
பள்ளிகள் திறந்த பின்பு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளிகள் திறந்த பின்பு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

09/Feb/2021 05:24:27

ஈரோடு பிப்:  தற்போது அரசு பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகளை திறந்தபின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் செயல்படும் கோபி கலை அறிவியியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றம் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1240 நபர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  பணி ஆணைகளை வழங்கி பேசியதாவது:

 அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இந்தியாவில் தமிழக மாணவர்களுக்கு  வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதுதான் கொள்கை. 24 ஆயிரம் பணியிடங்களுக்கு வேiவாய்ப்பு முகாம் நடைபெற்ற போதும் 10,121 பேர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அடுத்தாண்டில்  இந்த அரசு மீண்டும் பொறுப்பேற்கின்றபோது குறைந்த பட்சம்  10 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி படுத்தும். 

பெற்றோர்களின் கனவை இளைஞர்கள் நிறைவேற்ற வேண்டும். ஐடி முடித்தவுடன் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக படிப்பிற்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. கொளப்பலூருக்கு அருகாமையில் உருவாக்கப்பட்டுள்ள ஆயத்தஆடை பூங்காவில் 7500 பேர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். அவர்கள் தங்குவதற்கும் வீடுகளும் கட்டப்பட்டுள்ளது. சுயநிதி மூலம் தொழில் தொடங்க 25 நபர்களுக்கு நிதிகள் வழங்கப்படவுள்ளது என்றார்..

 இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம்  அமைச்சர் செங்கோட்டையன்  மேலும் கூறியதாவது: இந்த வேலை வாய்ப்பு முகாமில் 1240 பேர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் 15 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 85 நபர்களுக்கு மேலை நாடுகளில் வேலை கிடைத்துள்ளது.. தமிழகத்தில் நடத்தப்பட்ட வேலை முகாம் மூலம்  1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. 

நாவோதயா, கேந்திரிய  வித்யாலா பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் இல்லை என்ற தகவல் இப்போது தான் எங்களுக்கு தெரி வந்தது. இது சம்மந்தமாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதுவார். தற்போது அரசு பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகள் முழுமையாகத் திறந்த பின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

  இதில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், ஆட்சியர் சி. கதிரவன், எம்எல்ஏக்கள்- கே.வி. ராமலிங்கம், கே.எஸ் . தென்னரசு, இ.எம்.ஆர். ராஜா(எ) கே.ஆர். ராஜாகிருஷ்ணன், சு. ஈஸ்வரன்,  வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் வீரராகவராவ், கோவை மண்டல இணை இயக்குநர் லதா ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் மகேஸ்வரி, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தங்கதுரை, கோட்டாட்சியர் ஜெயராமன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்

Top