logo
பாஜக சார்பில் புதுக்கோட்டையில் சாலையோரம் பிழைப்பு நடத்தும் கைவினை கலைஞர்களுக்கு உதவி வழங்கல்

பாஜக சார்பில் புதுக்கோட்டையில் சாலையோரம் பிழைப்பு நடத்தும் கைவினை கலைஞர்களுக்கு உதவி வழங்கல்

04/Jun/2021 08:27:38

 

புதுக்கோட்டை, ஜூன் புதுக்கோட்டை மாவட்ட பா சாலையோரம் பிழைப்பு நடத்தும், வருமானம் இழந்த கூடை முடைதல், கயிறு திரித்தல், மண்பாண்டங்கள் செய்யும் கைவினைஞர்களுக்கு, கப சூக குடிநீரும், கொரோனாதடுப்பு  நிவாரணஉதவிகளும் வழங்கினர்.

மேலும், பசியுடன்தெருக்களில் சுற்றித் திரியும், பசுக்களுக்கும், கன்றுகளுக்கும், பனை வெல்லத்துடன் பச்சரிசி சாதமும், வாழைப் பழங்களையும் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர் ஏவிசிசி. கணேசன் வழங்கினார். பாஜக நகரத் தலைவர் சுப்பிரமணியன், நகர பொதுச் செயலாளர் லெட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

பிரதமராக மோடி பதவி ஏற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜவினர்  சேவை தினமாக நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில்  ஏற்கெனவே கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக, கபசு சூர குடிநீர், குடிநீர் பாட்டில், பால், முட்டை, அரிசி, ரொட்டி  பாக்கெட்டுகள், காய்கறிகள், பழங்கள், மாஸ்க்குகள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Top