logo
ஈரோடு மாநகர் பகுதியில் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள குவிந்த பொதுமக்கள்: டோக்கன் கிடைக்காததால் ஏமாற்றம்

ஈரோடு மாநகர் பகுதியில் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள குவிந்த பொதுமக்கள்: டோக்கன் கிடைக்காததால் ஏமாற்றம்

04/Jun/2021 01:56:25

 

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள சுகாதார மையங்களில் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் குவிந்தனர்.குவிந்தனர்தடுப்பூசி பற்றாக்குறையால்  பெருவாரியான மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இந்தியாவில் கொரோனா 2 - ஆம் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை பல்வேறு மாநிலங்களில் ஏற்படுத்தியது. கொரோனா பரவல்லை கட்டுப்படுத்த முதற்கட்டமாக கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன. முதலில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதேபோல் தனியார் ஆஸ்பத்திரியிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி போடும் மையங்களுக்கு  மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் திடீரென தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி கடும் தட்டுப்பாடு நிலவியது. முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் இரண்டாம் டோஸ் போட முடியாமல் திணறி வருகின்றனர். ஆனால் அதேநேரம் கோவிஷில்டு தினமும் 100 பேருக்கு வீதம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் அரசு ஆஸ்பத்திரியில் போடப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை  நிலவரப்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 946 பேர் தடுப்பூசி போட்டுக் கொண் டனர். இதில் 18 வயது முதல் 44 வயதுவரை உள்ள 39 ஆயிரத்து 50 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள சம்மதமாக குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. எந்த நாளில் எத்தனை பேருக்கு எந்த இடத்தில் தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரம் தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை காந்திஜி ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், அகத்தியர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 100 பேருக்கும், கருங்கல்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 100பேருக்கும், வீரப்பன்சத்திரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், ராஜாஜி புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும்.

நேதாஜி ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும்,பிபி அக்ரகாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100பேருக்கும்,.சூரியம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், பெரியசேமூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும்,சூரம்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும் கோவிசீல்டு தடுப்பூசி 18 வயது முதல் அனைத்து வயதினருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகிறது

இதற்காக காலையிலேயே வந்த மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசை அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதேநேரம் கோவேக்சின் தடுப்பூசிக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறதுஇந்நிலையில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 100 பேருக்குதான் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இது தெரியாமல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300  முதல் 500 பேர் மக்கள் திரண்டனர்.

 ஆனால் அவர்களுக்கு டோக்கன் வழங்க முடியவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் தடுப்பூசி போடும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்இதே போல கருங்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் டோக்கன் கிடைக்காத மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்குவந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இதைப்போல் பிபி அக்ரஹாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் அதிக அளவு கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுஇதைப் போன்று பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சமூக இடைவெளி கேள்விக்குறியானது

Top