logo
பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடையில்லாமல் தினந்தோறும் தடுப்பூசி போடப்படும்: எம்.எல்.ஏ ஜெயக்குமார் தகவல்

பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடையில்லாமல் தினந்தோறும் தடுப்பூசி போடப்படும்: எம்.எல்.ஏ ஜெயக்குமார் தகவல்

03/Jun/2021 08:44:56

ஈரோடு, ஜூன்: பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடையில்லாமல் தினந்தோறும் தடுப்பூசி போடப்படும் என  எம்.எல். ஜெயக்குமார் தகவல் தெரிவித்தார்.

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான இதுவரை தடுப்பூசி போடப்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இங்கு தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என அறிவித்திருந்தார்அதன்படி வியாழக் கிழமை காலை பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.  

இதனைத் தொடங்கி வைத்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த பின்னர்     பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கூறியதாவது:

பெருந்துறை அரசு மருத்துவமனையில் இனிமேல் பொதுமக்களுக்கு தடையில்லாமல் தினந்தோறும்  தடுப்பூசி வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக துடுப்பதி ஊராட்சி பகுதியில் தடுப்பூசி போடும் பணியையும் சீனாபுரம் பகுதியில் தடுப்பூசி போடும் பணியும் எம்எல்ஏ ஜெயக்குமார் துவக்கி வைத்தார். பின்னர் துடுப்பதி ஊராட்சி அலுவலகத்தில் அங்குள்ள துப்புரவு பணியாளர் களுக்கு காய்கறி,அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந் நிகழ்வில் பெருந்துறை வட்டார மருத்துவர் சாந்தி ராஜேந்திரன் டாக்டர் காந்திமதி துடுப்பதி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்பரசு சீனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் பேரூர் கழக செயலாளர் கல்யாணசுந்தரம் ஒன்றியக் கழகச் செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, அப்புக்குட்டி, மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Top