logo
கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை பெறாதவர்கள் நடப்பு ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்: ஆட்சியர் தகவல்

கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை பெறாதவர்கள் நடப்பு ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்: ஆட்சியர் தகவல்

03/Jun/2021 09:02:56

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் நடப்பு ஜூன் மாதத்தில்  பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: கொரோனா நோய் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் கடந்த 24.5.2021  முதல் தளர்வுகளில்லாத    முழுஊரடங்கு நடைமுறைப்படுத் தப்பட்டு வருகிறது. இந்த முழுஊரடங்கு 7.6.2021 காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

இதன் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையில்  பொது விநியோகத் திட்ட அரிசி பெறும்; மின்னனு குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணையாக மே மாதத்தில் 15.5.2021 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.2,000 வீதம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நிவாரணத் உதவித் தொகை 31.5.2021 முடிய புதுக்கோட்டை மாவட்டத்தில் 98.63 சதவீத  குடும்பங்கள் நிவாரணத் உதவித் தொகை பெற்றுவிட்டனர். மீதமுள்ள குடும்பங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத் தப்பட்ட நிலையிலும், முழுஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்ற காரணத்தினாலும், போக்குவரத்து வசதியின்மை காரணமாக நியாய விலைக் கடைகளுக்கு செல்ல இயலாத நிலையில் சில குடும்ப அட்டைதாரர்கள்  நிவாரணத் தொகை பெற இயலவில்லை.

ஆகவே, விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கான  கொரோனா நிவாரணத் உதவி முதல் தவணைத் தொகை ரூ.2,000 பெறும் வகையில் ஜூன் 2021 மாதத்தில் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய்  தொற்றிலிருந்து குடும்ப அட்டைதாரர்கள் தங்களை தற்காத்து கொள்ளும் பொருட்டு முகக் கவசம் அணிந்தும் மற்றும் 2 மீட்டர்; சமூக இடைவெளியை கடைபிடித்தும் கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2,000 பெற்றுக் கொள்ள தவறிய அரிசி பெறும்   குடும்ப அட்டைதாரர்கள் ஜூன்-2021 மாதத்தில் தொடர்புடைய நியாய விலை கடை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Top