30/Sep/2020 06:36:30
தமிழகத்தில் புதன்கிழமை(30.9.2020) புதிதாக 5,659 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய புள்ளிவிவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,659 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,295 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,97,602 ஆக உயர்ந்துள்ளது. இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் 67 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது.மேலும் ஒரேநாளில் 5,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (30.09.2020) புதிதாக 88 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 92 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 9,080 பேர் பாதிக்கப்பட்டனர். இதில். 8,222 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 719 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 139 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.