logo
புதுக்கோட்டை அம்மா உணவகத்தில் ஏழை, எளியோருக்கு விலையில்லா உணவு: அமைச்சர் ரகுபதி விநியோகம்

புதுக்கோட்டை அம்மா உணவகத்தில் ஏழை, எளியோருக்கு விலையில்லா உணவு: அமைச்சர் ரகுபதி விநியோகம்

02/Jun/2021 12:45:57

புதுக்கோட்டை, ஜூன்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  பிறந்த  (ஜுன் 3)  நாளை   முன்னிட்டு  புதுக்கோட்டை அம்மா உணவகத்தில் ஏழை, எளியோருக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை சட்டத்துறை  அமைச்சர் ரகுபதி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  பிறந்த  (ஜுன் 3)  நாளை   முன்னிட்டு  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி  சார்பில் ஊரடங்கு அமலில் உள்ள நாள் வரை  புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் மற்றும் இராணியார் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில்  ஏழை எளியவர் களுக்கு விலையில்லாமல் உணவு வழங்கிடும் வகையில் தனது சொந்த தொகை ரூ.1.50 லட்சத்தினை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையிலுள் அம்மா உணவகத்தில் புதன்கிழமை  (2.6.2021) ஏழை, எளியோருக்கு விலையில்லா உணவினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ். ரகுபதி  வழங்கினார்.

பின்னர்  அமைச்சர்  தெரிவித்ததாவது: தமிழகத்தில் கோவிட் தொற்றை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள முழு முடக்க  காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு ஏற்கெனவே முதற்கட்டமாக ரூ.2,000  கோவிட் நிவாரணத் தொகை வழங்கப்பட்டதுடன், விரைவில் இரண்டாம் கட்டமாக ரூ.2,000 வழங்கப்பட உள்ளது.

மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ( ஜுன் 3) பிறந்த நாளில் ஏழை, எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், புதுக்கோட்டை நகராட்சி பழைய பேருந்து நிலையம், இராணியார் மருத்துவமனை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் தினமும் சாப்பிட வரும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு விலையின்றி உணவுகளை வழங்கும் வகையில் நேற்றையதினம் எனது சொந்த தொகையிலிருந்து ரூ.1.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

அந்த வகையில் இன்று முதல் ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு விலையில்லா உணவுகள் வழங்கும் வகையில் இன்று முதல் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கும் உணவு பணி  தொடங்கி  வைக்கப் பட்டுள்ளது. எனவே ஊரடங்கு முடியும் வரை ஏழை, எளிய பொதுமக்கள் எவ்வித கட்டணமின்றி இந்த உணவகத்தில் சாப்பிடலாம்.

கோவிட் காலத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணி ந்து இங்கு உணவுகளைப் பெற்றுச் செல்லவும், ஊழியர்களும் கோவிட் தடுப்பு வழி முறைக ளை தவறாது பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி. இதில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, நகராட்சி பொறியா ளர் ஜீவாசுப்பிரமணியன், நகரச்செயலர் . நைனாமுகமது உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

Top