logo
டாஸ்மார்க் மதுக் கடைகளை மூட வேண்டும்: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்.

டாஸ்மார்க் மதுக் கடைகளை மூட வேண்டும்: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்.

13/Dec/2020 07:49:16

சென்னை: சென்னையில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தில்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி குறித்தும், தொகுதி பட்டியலை தயார் செய்வது குறித்தும் விஜயகாந்த் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அளித்த பேட்டியில், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளது ஆனாலும் தேர்தல் கூட்டணி குறித்து கட்சித்தலைவர் விஜயகாந்த்தான் முடிவு எடுப்பார்.  தனித்து போட்டியிடும் அளவுக்கு தே.மு.தி.க. வலுவாக உள்ளது  என்றார்.

மேலும், தேமுதிக கட்சி சார்பில் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மார்க் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆஸ்திரேலியாவில் முத்திரை பதித்த யார்க்கர் மன்னன் நடராஜனை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, பல நாட்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top