logo
கொரோனா நிவாரண நிதிக்கு தனது சேமிப்பு பணத்தை வழங்கிய 8 வயது இரட்டையர்கள்.

கொரோனா நிவாரண நிதிக்கு தனது சேமிப்பு பணத்தை வழங்கிய 8 வயது இரட்டையர்கள்.

13/May/2021 05:14:38

ஈரோடு, மே ஈரோட்டில் 8 வயது சிறுவர்கள் தனது தான் சேமிப்பு பணத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவனிடம் அளித்தனர்.

 ஈரோடு தங்பொருமாள் வீதி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கேஸ் கம்பெனி நடத்தி வருகிறார்இவருடைய 8 வயதான இரட்டை மகன்கள் இனியன்,  இன்பன் ஆகியோர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் தனது தந்தை சிவக்குமார் தரும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு. ஸ்டாலின்  முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அந்த வகையில் இனியன்இன்பன் தனது தந்தை சிவக்குமாருடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து இருவரும் தனது  சேமிப்பு பணம் சுமார் ரூ.2000 -தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

பணத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கதிரவன் இனியன்இன்பன் ஆகியோரைப் பாராட்டினார். இதனையடுத்து தமிழக முதல்வர் மு. ஸ்டாலின்  பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து நீங்க எல்லோருக்கும் நல்லது செய்யுங்கள். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது, கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் அரசு சொல்வதை கேட்க வேண்டும் என இனியன்இன்பன் இரட்டையர்கள் கேட்டுக்கொண்டனர்.

Top