logo
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு தனியார் துறை சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் பேருந்துகள் ஒப்படைப்பு

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு தனியார் துறை சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் பேருந்துகள் ஒப்படைப்பு

29/May/2021 05:54:29

ஈரோடு. மே: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் யங் இந்தியன் அமைப்பு மற்றும் சிஐஐ அமைப்பினர் சார்பில்  இலவசமாக வழங்கப்பட்ட  அனைத்து வசதிகளுடன் கூடிய ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி பொருத்தப்பட்ட  பேருந்தை  அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோட்டைச் சேர்ந்த யங்க் இண்டியன்ஸ் அமைப்பும்சி..ஐஅமைப்பினரும் கொரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள், முழு ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் ஆகியோருக்கு தொடர்ந்து தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர்.

இரண்டாம் அலை கொரோனா நோய்த்தொற்று  மாவட்டம் முழுவதும் பரவி தற்போது அதிகரித்து நோய்க்குள்ளாவோர் அதிகளவு சுவாசத் திணறலால் பாதிப்புக்குள்ளாவதும், அந்த நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் இருந்து வருவதால் அதனைத் தவிர்ப்பதற்காக இந்த அமைப்பினர் ஆக்சின் உற்பத்தி பேருந்தினை வழங்க முடிவு செய்தனர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிடும் கொரொனா நோயாளிகள்  ஆக்சிஜன் இன்றி தவிப்பதைத் தடுத்திடும் வகையிலும், அவர்கள் பயன்பெற்றிடும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆக்சிஜன்  உற்பத்தி பேருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்சிஜன் உற்பத்தி பேருந்து ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளதுடன், 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த உற்பத்தி இயந்திரத்தில் போதுமான அளவு வரை தண்ணீரை மட்டும் நிரப்பினால் 8 நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிசனை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

ஆக்சிஜன் தேவைக்காக மட்டுமே  உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆக்சிஜன் உற்பத்தி பேருந்தினை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகள் பயன்பாட்டிற்காக தன்னார்வல அமைப்பினர் ஈரோடு மாநகராட்சித் துறை அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பேருந்து அரசு தலைமை மருத்துவமனையை வந்தடைந்தது.

Top