logo
 பிறந்தது மார்கழி மாதம்... புதுக்கோட்டையிலுள்ள கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி வழிபாடு

பிறந்தது மார்கழி மாதம்... புதுக்கோட்டையிலுள்ள கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி வழிபாடு

16/Dec/2020 09:46:23

புதுக்கோட்டை-டிச:  மார்கழி மாதப்பிறப்பையொட்டி புதுக்கோட்டையிலுள்ள கோயில்களில்  திருப்பள்ளி எழுச்சி  சிறப்பு வழிபாடு  விமரிசையாக நடைபெற்றது.

மார்கழிஇன்று(டிச.16)  மாதம் பிறந்ததை யொட்டி   பெண்கள் அதிகாலையில் எழுந்து  தங்களது வீட்டின் வாசலில்  வண்ண  கோலமிட்டு சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு   மார்கழி மாதத்தை பக்தி பரவசத்துடன் வரவேற்றனர். புதுகை  நகரில் அதிகாலையில் சாரல் மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் வாசலில் கோலமிட்டனர்.

 திருப்பள்ளிஎழுச்சி  சிறப்பு வழிபாடு: புதுக்கோட்டையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் திருப்பள்ளிஎழுச்சி  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மார்கழி மாதம் முதல்நாளில் புதுக்கோட்டையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் திருப்பள்ளிஎழுச்சி  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில், குமரமலை தெண்டாயுதபாணி பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில்,  திருவப்பூர் அங்காளபரமேஸ்வரி அம்மன்கோவில், திருக்கோகர்ணம் ஸ்ரீபிரகதம்பாள் கோவில், பெரம்பூர் வீரம்மாகாளியம்மன் கோவில்.

 புதுக்கோட்டை நகரில் சாந்தநாதர் சுவாமி  கோவில், அரியநாச்சி அம்மன்,  மேலராஜ வீதியில் உள்ள  அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோவில், வரதராஜப்பெருமாள் விட்டோபாபெருமாள் தெற்கு 3-ஆம் வீதி பிருந்தாவணம் ஆஞ்சநேயர், ஷண்முகா நகரிலுள்ள  அருள்மிகு செல்வ விநாயகர் கோயில்  உள்ளிட்ட ஆலயங்களில் உற்சவருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகங்கள்  நடைபெற்று மற்றும் சந்தனக்காப்பு மலர் அலங்காரம்     தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள்  குடும்பத்துடன்  வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வெண் பொங்கல்,சர்க்கரை  பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.      


Top