logo
பெருந்துறையில் முன்கள பணியாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம். பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்

பெருந்துறையில் முன்கள பணியாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம். பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்

28/May/2021 10:21:40

ஈரோடு, மே:  ஈரோடு  அருகே பெருந்துறையில் 18 முதல் 44 வயதுள்ள முன்களப்பணியாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.இதனை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 18 வயது முதல் 44 வயதுடைய முன்களப் பணியாளர்களுக்குதடுப்பூசி போடும் முகாம் அவசியம் குறித்து  மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல். ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் (மே28) வெள்ளிக்கிழமை காலை முன்கள பணியாளர்களான ஊராட்சிமன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், சுகாதார துறை,வருவாய்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை சார்ந்த ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள், பால் வியாபாரம் செய்பவர்கள், நாளிதழ் போடுபவர்கள், பெட்ரோல் பங்கு ஊழியர்கள், கேஸ் சிலிண்டர் போடுபவர்கள், உணவக ஊழியர்கள், கூரியர் போடுபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தனியார் ஆய்வக நுட்புநர்கள், வணிகர்கள், வங்கி ஊழியர்கள், ஏடிஎம்  ஊழியர்கள் என 400 நபர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி போடப்பட்டது.

இவர்கள் அனைவரும் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை அல்லது சான்று மற்றும் ஆதார் அட்டையை பதிவு செய்து தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். மருத்துவர் சவீதா ஆர்த்தி தலைமையில் மருத்துவக்குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர்.

இம்முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் .வெ.பாவேசு, ஒன்றியக்குழு தலைவர் சாந்திஜெயராஜ்,வேளான் கூட்டுறவு வங்கி தலைவர் விஜயன் () ராமசாமி,அப்புக்குட்டி, கே பி எஸ் மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Top