20/Mar/2021 09:38:16
புதுக்கோட்டை, மார்ச்: மதசார்பற்ற கூட்டணியில் திமுக சார்பில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா திருவப்பூர் முத்துமாரி யம்மன் கோயிலில் தரிசனம் செய்தபிறகு தனது தேர்தல் பிரசாரத்தை முறைப்படி சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கினார்.
இந்நிகழ்வில்,திமுக நிர்வாகிகள் க. நைனாமுகமது, சுப. சரவணன், எம்.எம். பாலு, என்.கே. அறிவுடை நம்பி, சாத்தையா, எம். லியாகத் அலி, டி. அப்புக்காளை,ஆர்.எம். சத்யா, ராமசெல்வராஜ், முரளி, வழக்குரைஞர்கள் திருஞானசம்பந்தம், செந்தில்குமார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சி. அடைக்கலசாமி, மாவட்டக்குழு நாராயணன், டி. சலோமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பா. பாண்டியராஜ், சிற்பி உலகநாதன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏ. இப்ராஹிம்பாபு, எம்ஏஎம். தீன்,ராஜாமுகமது, சரவணன், ராஜசேகரன், ஶ்ரீதர், மணி.
மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி துரைமுகமது,விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முத்துகுமார், அண்ணாதுரை, மதிமுக நிர்வாகி அரசிகருணாநிதி உள்பட திரளானோர் கலந்து கொண்டு அப்பகுதியில் வாக்கு சேகரித்தனர்.