logo
ஈரோடு மாநகர் பகுதிகளில்  250 நடமாடும் வாகனங்களில் காய்கறி,மளிகை பொருட்கள் விற்பனை:  விலைப் பட்டியல் வைக்க முடிவு

ஈரோடு மாநகர் பகுதிகளில் 250 நடமாடும் வாகனங்களில் காய்கறி,மளிகை பொருட்கள் விற்பனை: விலைப் பட்டியல் வைக்க முடிவு

26/May/2021 07:43:54

ஈரோடு, மே: ஈரோடு மாநகர் பகுதிகளில்  250 நடமாடும் வாகனங்களில் காய்கறி,மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படு் நிலையில் பொருள்களின்   விலைப் பட்டியலை வாகனங்களில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதேபோல் மாநகர் பகுதியிலும் தொடர்ந்து தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. மாநகர் பகுதியில் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாக வந்து மளிகை, காய்கறி பொருட்களை வாகனங்களில் வந்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.இதற்கு மாநகராட்சியும் அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 22-ஆம் தேதி வண்டிகளில் காய்கறி மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காய்கறி, மளிகை கடைகளுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநகர் பகுதியில் கூடுதலாக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதலில் 132 வேன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்று மட்டும் 250 வாகனங்களில்  காய்கனி மளிகை பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: முழு ஊரடங்கின் போது மாநகர் பகுதியில் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு நடமாடும் வண்டிகள் மூலம் காய்கறி பழங்கள் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

முதலில் 132 வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது நாளுக்குநாள் இதன் தேவை அதிகரித்துள்ளதால் இன்று மட்டும் 250 வாகனங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 190 வாகனங்கள் மற்றும் காய்கறி விற்பனையும், 20 வாகனங்களில் மளிகை பொருட்களும், 40 வாகனங்களில் பழ விற்பனையும் செய்யப்படுகிறது.

இந்த நடமாடும் வாகனங்களில் சாதாரண மார்க்கெட்டில் விற்கப்படும் அளவுக்கு தான் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படவில்லை. எனினும் இங்கு விற்கப்படும் காய்கறிகள் பழவகைகளுக்கு விலை பட்டியல் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து விலைப் பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Top