logo
கொரோனா வார்டில் கூடுதலாக 40 படுக்கைகள், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் இயக்கி வைப்பு

கொரோனா வார்டில் கூடுதலாக 40 படுக்கைகள், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் இயக்கி வைப்பு

26/May/2021 07:13:28

ஈரோடு மே: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் கூடுதலாக 40 படுக்கைகள், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை அமைச்சர் முத்துசாமி தொடக்கி வைத்தார்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில்  டி.ஆர்.., முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கொரோனா வார்டில் கூடுதலாக 40 படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களின்  செயல்பாடுகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தொடக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்துவீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி கூறியதாவதுஈரோடு அரசு மருத்துவ மனையில் 131 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை உள்ளது. புதிதாக 40 ஆக்சிஜன் இணைப்பு படுக்கை ஏற்படுத்தப்பட்டு எண்ணிக்கை 171 என உயர்ந்துள்ளது. 10 நாளில் இதனை 250 படுக்கையாக அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோயாளியுடன் வருவோரை தங்க வைக்க தனி வசதி செய்ய உள்ளோம். நோயாளிகளின தேவையை பூர்த்தி செய்ய, தன்னார்வலர்கள் உள்ளனர். தன்னார்வலர் பணி செய்ய விரும்பும் நபர்கள் எங்களை அணுகி சேவையை தொடரலாம்.


பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 1, 550 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்B N I அமைப்பு மூலம் 50 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தியுடன் செறிவூட்டும் இயந்திரத்தை வழங்கினர். அதன் செயல்பாடு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 நோயாளிகளுக்கு ஆக்சிஜன், 24 மணி நேர மும் வழங்க முடியும். இதனை 100 படுக்கைக்கு வழங்கும் படி தரம் உயர்த்தும் பணி நடக்கிறது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை தருவதில் சிக்கல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். நோயாளிக்கு சிகிச்சை தர தாமதம் செய்யக்கூடாது. இப்பிரச்னையை தீர்க்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்படும் என்றார் அமைச்சர் சு. முத்துசாமி.

Top