logo
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பாதுகாக்க ஏற்பாடு: ஆட்சியர் தகவல்

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பாதுகாக்க ஏற்பாடு: ஆட்சியர் தகவல்

17/May/2021 01:11:15

புதுக்கோட்டை, மே: கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும்  18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பாதுகாக்க உரிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தியுள்ளதாக  மாவட்ட நிர்வாகம்  அறிவித்துள்ளது.

இதுகுறித்து  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில்  கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிரிழக்கும் பெற்றோர்களின்  18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு  உரிய பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில்


அந்தக் குழந்தைகளை  பாதுகாத்து பராமரிக்கும் வகையில் தங்குமிடம், உணவு உள்ளிட்டவகைகதளை வழங்க தற்காலிகமாகவோ  அல்லது நிரந்தரமாகவோ அரசு அங்கீகாரம் பெற்ற  பெற்ற குழந்தைகள்  காப்பகத்தில்  தங்க வைத்து பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலர்  8056431053, 04322 -221266, குழந்தைகள் நலக்குழு தலைவர் 9486156043, 04322 - 222492 மற்றும் சைல்டு லைன் 1098  என்ற  இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் .

Top