logo
மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக வரும்  மக்களுக்கு உதவிட 3 பேரை நியமித்தார் புதுகை எம்எல்ஏ..!

மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு உதவிட 3 பேரை நியமித்தார் புதுகை எம்எல்ஏ..!

24/May/2021 07:55:57

 

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் வை.முத்துராஜா  தனது சொந்தப்பொறுப்பில் 3 பேரை நியமித்துள்ளார்.

இது குறித்து எம்எல்ஏ- முத்துராஜா  மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  பல்வேறு சிகிச்சைக்காகச்செல்லும் பொதுமக்களுக்கு  வழிகாட்டி உதவிடும் வகையில்  3 பேரை எனது சொந்தப்பொறுப்பில் நியமித்துள்ளேன். அந்தநபர்களின் கைபேசி எண்களை  பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார். முத்துகுமார் - 9597693317  /  பால்ராஜ்- 8760313860 /  பாண்டியன் -8508332730.

Top