24/Apr/2021 07:18:03
சென்னை, ஏப்: தமிழகத்தில் 40 சதவீதம் படுக்கைகள் காலியாக உள்ளதால் பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ரெம்டெவிசிர் மருந்தை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் பொதுமக்கள் போட்டுக்கொள்ளக்கூடாது. தமிழகத்தில் ஆக்சிஜன், தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
கொரோனா சிகிச்சைக்காக பயன்படும் படுக்கைவசதிகள் போதிய அளவில் செய்யப்பட் டுள்ளன. அதில் சுமார் 40 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன. எனவே, பொதுமக்கள் பதற்றத்துடன் மருத்துவமனைகளில் குவியத்தேவையில்லை என்றார் ஜெ. ராதாகிருஷ் ணன்.