logo
நெற் கதிர்கள், ஏர்கலப்பைகளை வைத்து நூதன முறையில் 5 -ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

நெற் கதிர்கள், ஏர்கலப்பைகளை வைத்து நூதன முறையில் 5 -ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

18/Dec/2020 04:54:42

ஈரோடு, டிச: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் வெள்ளிக்கிழமை  23 - ஆவது நாளாக நீடித்து வருகிறது. 

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ,தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் காலி இடத்தில் கடந்த 14-ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.அவர்களது போராட்டம் இன்று 5-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காத்திருப்பு போராட்டத்தில்  பங்கேற்பவர்கள் ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

அதன்படி, வெள்ளிக்கிழமை நடந்த  போராட்டத்திற்கு அதில  இந்திய விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி, சுப்பு, பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   போராட்டத்தில் கலந்து கொண்டவர் கள் நெற்கதிர்கள், கரும்பு, ஏர் கலப்பை ஆகியவற்றை வைத்துக்கொண்டு மூன்று வேளாண் சட்டங்களை  திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். 

இந்த போராட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.  வெள்ளிக்கிழமை  மாலையுடன் காத்திருப்பு போராட்டம் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து 20 -ஆம் தேதி முதல் கிராமம் கிராமமாகச் சென்று வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக  விவசாயிகள் கூறியு ள்ளனர். 


Top